வியாழன், 5 ஜனவரி, 2012

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோயில்




விருதாச்சலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோயில் நூற்றியெட்டு வைணவதலங்களில் ஒன்றாகும்.
வராக மூர்த்தி பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஸ்ரீ பூவராகசுவாமி சந்நிதி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது.

விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில் இது.சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோயில் இது. கல்லினால் ஆன சங்கிலி பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

புதிய வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது.இதற்கு வாகனம் படைத்தல் என்று கூறுகிறார்கள்.

தவிர விபத்துக்குள்ளான வாகனங்களை ரிப்பேர் செய்த பின்பு இங்கு ஓட்டி வந்து பூவராக பெருமாளிடம் வழிபட்ட பின்னர் ஓட்டுகின்றனர். நான் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இக்கோவிலுக்கு சென்றுவந்தேன்.

2 கருத்துகள்:

  1. அருமையான பதிவு...நிறைய எழுதுங்கள்

    இளமுருகன்
    நைஜீரியா

    பதிலளிநீக்கு
  2. நன்றி! பொங்கலன்று ஒரு புதிய ஆலயம் செல்ல திட்டம்.தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு