சனி, 5 மார்ச், 2011

திருவதிகை"













கடலூர் மாவட்டம் பண்ருட்டி க்கு கிழக்கே ஒருகி.மி தொலைவில் உள்ளது
திருவதிகை. இது அட்ட வீரட்ட சிவத்தலங்களில் ஒன்றாகும்.இறைவன்
திருநாமம்;வீரட்டானேஸ்வரர்.திரிபுர சம்ஹார மூர்த்தி .இறைவி;பெரியநாயகி
.
இந்த இறைவனை வணங்கி வழிபட வயிறுசம்பந்தமான நோய்கள் தீரும்.அப்பர்
சுவாமிகளுக்கு சூலை நோயை தீர்த்து அவரை சைவத்திற்கு மாற்றிய தீர்த்த
கிணறு இன்றும் உள்ளது
.
தஞ்சை பெரிய கோவிலும் ,கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும் இதை மாடலாக வைத்து
கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது
.
ஆயுதங்கள் ஏதுமின்றி ஒரு சிரிப்பினாலேயே இறைவன் முப்புரம் எரித்தது இங்கேதான்!
தேவாரம் முதலில் பாடப்பட்டது இங்கேதான்.

இறைவன் தேரில் வந்தததால் கோயில்களில் தேர் உற்சவம் நடத்தும் ஐதீகம்
ஏற்பட்டது இங்கிருந்துதான்!

கருவறை விமானம், மண்டபம் ரத அமைப்பை கொண்டது.

உழவாரப்பணி திருநாவுக்கரசரால் முதன் முதலில் இங்குதான் செய்யப்பட்டது
.
ஆணவமாய் இங்கு வந்தவர்கள் திரும்ப இங்கு வர மாட்டார்கள். அந்த அளவு சக்தி
வாய்ந்தது .இங்கு விபூதியை குனிந்து தான் பூசவேண்டும்.

இதுமட்டுமின்றி இன்னும் ஒரு சிறப்பு உண்டு.
நவகிரகங்களுக்கு உண்டான மரங்களும் ,இருபத்து ஏழு நட்சத்திரங்களுக்கு
உண்டான மரங்களும் இங்கே அமைக்கப்பட்டுள்ளன .நமது நட்சரத்திற்கான மரம் எது
? அம்மரம் எந்த சிவாலயத்தில் தல விருட்சமாக உள்ளது ?நமது நட்சத்திரத்தில்
பிறந்த தெய்வங்கள் எவை ? என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

அம்மன் பெரியநாயகிக்கு தனி சந்நிதி அமைந்து உள்ளது.

கோபுரம் சற்று உயரம குறைவாக இருப்பதால் அதில் உள்ள சுதை சிற்பங்கள் நம்
பார்வைக்கு விருந்தாக அமைந்துள்ளது .

அமைவிடம்; கும்பகோணம் –சென்னை சாலையில் அமைந்துள்ளது பண்ருட்டி
.விழுப்புரம் –கடலூர் சாலை வழியாகவும் பன்ருட்டி வரலாம்.
பண்ருட்டியிலிருந்து கடலூர் 25 km ;விழுப்புரம் 30km பாண்டிச்சேரி 45km

பண்ருட்டியிலிருந்து திருவதிகைக்கு நகரபேருந்துகளும் ,ஷேர் ஆட்டோக்களும் உண்டு.

சர நாராயண பெருமாள் கோயில்





இந்த கோயிலும் பண்ருட்டியை அடுத்த திருவதிகை என்ற ஊரில் அமைந்துள்ளது
.சிவன் கோயிலில் இருந்து ஒரு கி.மி. கடலூர் சாலையில் செல்லவேண்டும்.
முப்புரம் எரிக்க சிவனுக்கு அம்பாக பெருமாள் இருந்தததால் சரநாராயணர்
என்று அழைக்கப்படுகிறார்!

தாயார் ஹேமாம்புஜவல்லி .
கண்ணாடி அறையில் பெருமாளும் ,தாயாரும் அமர்ந்து இருக்கும் காட்சி காண கிடைக்காதது.
எந்த கோவிலிலும் இல்லாத இன்னொரு விசேஷம் நரசிம்ம மூர்த்தி சயன கோலத்தில்
இருப்பதாகும். மிகவும் அழகான கோவில்
.இதற்க்கு மிக அருகாமையில் ரங்க நாதர் கோயில் ஒன்றும் உள்ளது.
ஸ்ரீ ரங்கம் ரங்க நாதரை போல் பெருமாள் வலக்கையை தலைக்கு வைத்து காலை
வடக்கு நோக்கி நீட்டி ஓய்வாக படுத்திருக்கும் கோலம அற்புதமானது .

திருவதிகைக்கு ஒருமுறை சென்று அம்மையப்பனையும் ,நாராயணர் மற்றும்
அரங்கனையும் தரிசனம் செய்து ஒரு புது அனுபவம் பெறுங்கள்!