செவ்வாய், 3 ஜனவரி, 2012
பழமலை நாதர் என்கிற விருத்தகிரீஸ்வரர் !
சிவபெருமானால் முதலில் (ஆதியில்) படைக்கப்பெற்றது. எனவே,முதுகுன்றம் எனப்படுகிறது.தற்போது விருத்தாசலம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் பழமலை நாதர் .இறைவி பெரியநாயகி.
இங்கு இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால் வீசி இளைப்பாற்ற, இறைவன் அவர்களுக்கு காதில் ஐந்தெழுத்தை உபதேசித்துத், தமது உருவமாக்கும்(சாரூப நிலை)என்பது இங்கு ஐதீகம்.
ஆதலால், இது காசியினும் மேம்பட்டதாகும்.காசியை விட வீசம் பெரிது என்பார்கள்!
.
இத்தல விநாயகர் , பாதாள விநாயகர் மிக்க சிறப்புவாய்ந்தவர்.
சோழர்கள், காடவர், பாண்டியர், விஜய நகரத்தார் மற்றும் குறுநில மன்னர்கள் ஆகியோரது கல்வெட்டுகள் இங்கு உள்ளது.
"விருத்தாசலம் " விழுப்புரம் - திருச்சி இரயில் பாதையில் உள்ள முக்கிய இரயில்நிலையமாகும். நிலையத்திலிருந்து 2-கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பஸ் வசதி உள்ளது.
எனது ஆங்கில புத்தாண்டு இவ்வாலயத்திலிருந்தே தொடங்கியது!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படங்களுக்கு நன்றி.முடிந்தால் என் பக்கத்தை படித்து பாருங்கள்.
பதிலளிநீக்குhttp://ahilanelamurugan.blogspot.com
தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் வலைப்பூவும் அருமை!
பதிலளிநீக்கு