செவ்வாய், 29 ஜனவரி, 2013


காஞ்சி ஏகாம்பர நாதர் கோயில். தொண்டை நாட்டின் மிக புகழ் வாய்ந்த சிவத்தலம். கோயிலின் பரப்பளவு சுமார் 23 ஏக்கர். பண்டைய சமய ஏடுகளில் திருக்கச்சி ஏகம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏகம்+ஆம்ரம் = ஏகாம்பரம். ஒப்பற்ற மாமரம். அதனடியில் அமர்ந்து அருள்பாலிப்பதால் இறைவன் ஏகாம்பரநாதர் என்ற பெயர் பெற்றார். தன்னை எதிப்பவர் பலத்தில் பாதிப் பலம் கிட்டும்படி வாலி வரம் பெற்றது இங்குதான். வரம் பெற்றவன், இங்குள்ள சிவலிங்கத்தை வாலால் பெயர்க்க விழைகிறான். லிங்கம் ஒரு அங்குலம் கூட அசையவில்லை! அகந்தை அகன்று பெருமானை வழிபட்டுச் சென்றான். பெற்ற பெருவரங்களால் கயிலை மலையைப் பெயர்க்க முயற்சிக்கிறான் இராவணன். சிவன், தனது கால்விரலை லேசாக அழுத்த, இராவணன் சிக்குண்டு “கச்சிஏகம்பனே” என்று கதறுகிறான். மனமிரங்கிய ஏகாம்பரேஸ்வரன் அவனை மன்னித்து அருள்புரிகிறார். சுந்தரர், தனது இழந்த பார்வையைப் பெற்ற திருத்தலம். 172 உயரமுள்ள இராஜகோபுரம் கொண்ட தலம். முதல் அடியார்கள் மூவரால் பாடல் பெற்ற திருத்தலம். 108 வைணவத் தலங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் இங்கு தனிச் சன்னதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்புரியும் தலம்.
பஞ்சபூதத் தலங்களில் இது பூமி. (பிருத்வி) இன்னும் சிறப்புகள் ஏராளம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக