திருப்பனந்தாள்-செஞ்சடையப்பர்:கும்பகோணத்திலிருந்து சென்னை நெடுஞ்சாலையில் வடகிழக்கில் 18 கிலோ மீட்டரில் உள்ளது.
தலவிருட்சம்:பனைமரம் பனைமரத்தைத் தலவிருட்சமாக கொண்ட தலம்.எனவே இவ்வூருக்கு பனந்தாள் என்று பெயர்.தெய்வப்பனை இரண்டு இக்கோயிலின் பிரகாரத்தில் இருக்கிறது
கோவில் அமைப்பு:
மேற்கு நோக்கி உள்ள செஞ்சடையப்பர் கோவிலின் வாயிலில் நீண்டுயர்ந்த கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் 16 கால் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் கீழ்ப்புறம் நாககன்னிகை தீர்த்தம் இருக்கிறது. கோவிலின் வெளிப் பிரகாரத்தின் கீழ்ப் பக்கத்தில் ஸ்தல விருட்சம் பனைமரமும் அதன் அருகில் தாடகை வழிபட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. மூலவர் செஞ்சடையப்ப்ர் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. இதற்கு வடக்கில் மேற்கு நோக்கிய பிரஹந்நாயகியின் சந்நிதி இருக்கிறது.
வழிபட்டோர் : பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர்,
சூரியர், சந்திரன், ஆதிசேஷன்,
நாககன்னிகை, தாடகை, குங்கிலியக்கலய நாயனார்
ஆகியோர்.
இத்தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது.